ஒண்டிவீரன் நினைவு தினம்: டிடிவி தினகரன் புகழஞ்சலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒண்டிவீரன் நினைவு தினம்: டிடிவி தினகரன் புகழஞ்சலி

ஒண்டிவீரன் நினைவு தினம்: டிடிவி தினகரன் புகழஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினத்தையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் ஒண்டிவீரன் எனக் குறிப்பிட்டுள்ளார். நெற்கட்டாஞ்செவ்வலை ஆட்சி செய்த மன்னர் பூலித்தேவரின் முக்கிய படைத்தளபதியாக இருந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை ஏற்காமல், தாய்நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடிய ஒண்டிவீரனின் வீரமும் தியாகமும் தமிழினத்தின் பெருமையாக விளங்குவதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அவரது வீரத்தையும் தியாகத்தையும் என்றும் நினைவுகூர்ந்து போற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.