சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தியாகி இம்மானுவேல் சேகரன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தன்னலமின்றிப் பாடுபட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகழைப் போற்றி வணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.