ஒசூர் அருகே பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர்கள்: வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒசூர் அருகே பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர்கள்: வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி

ஒசூர் அருகே பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர்கள்: வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒசூர் மந்திகிரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கால்நடைப் பண்ணை வளாகம் மற்றும் அதன் அருகிலுள்ள தின்னூர், அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். அம்மன் நகரில் செயல்பட்டு வரும் மாட்டுத் தீவனத் தொழிற்சாலையிலும் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளர்களுக்கு மதிய உணவாக சாதம், சாம்பார், சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அப்போது உணவில் பல்லி விழுந்திருந்தது தெரியாமல் அதைச் சாப்பிட்ட 13 தொழிலாளர்களுக்கு சிறிது நேரத்திலேயே கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்களும் தொழிற்சாலை நிர்வாகத்தினரும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு ஒசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மந்திகிரி காவல் நிலைய போலீசாரும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று தொழிற்சாலையின் சமையலறையில் ஆய்வு நடத்தினர். மேலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, உணவு விநியோகப் பொறுப்பை ஏற்றிருந்த ஒப்பந்ததாரரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒசூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.