ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு – பரிசல் இயக்கத் தடை

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததால், பரிசல் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மாறுபட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், தமிழக - கர்நாடக மாநில எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.