ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து கடந்த 9 நாட்களில் மட்டும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் 4.95 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 108.95 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,551 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், காவிரியில் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் பீச்சனஹள்ளி அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 2,275.56 அடியாக இருந்தது.கடந்த 13-ந் தேதி கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக இருந்தது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 13-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 9 நாட்கள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கபினி அணையில் இருந்து மட்டும் தமிழகத்துக்கு 4.95 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடிக்கு சமம்.தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், கடந்த 9 நாட்களில் கபினி அணையின் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது. 19.52 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று 14.57 டி.எம்.சி. நீர் இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7,184 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12,940 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டிருந்தது.இதன்படி, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு மொத்தம் 14,940 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை தொடர்ந்து அமலில் உள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆகஸ்ட் 22) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.