ஐப்பசி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஐப்பசி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

ஐப்பசி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மலைக்குச் செல்லும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் திடீரென மழை பெய்து ஆற்றுப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால், பக்தர்கள் மலை ஏறிச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.