ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை

ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் சில எதிர்மறையான விளைவுகளை உலகம் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அதேவேளையில் அதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மன் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தின் பலன்களைப் பெறுவதற்காக, அதனுடன் தொடர்புடைய சில ஆபத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கலாம். ஏஐ பொதுமக்களின் பரவலான பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதுடன், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுக்கு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். ஏஐ தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும், குறிப்பாக பெரிய அளவிலான ஹேக்கிங், தவறான பயன்பாடு, மோசடி உள்ளிட்டவற்றை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சாம் அல்ட்மன் கூறினார். ஏஐ பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைவிட, அதன் மூலம் மக்கள் பெறக்கூடிய நன்மைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்துக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஓபன் ஏஐ மற்றும் அதன் போட்டி நிறுவனமான ஆந்த்ரோபிக் ஆகியவற்றுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அல்ட்மன் குறிப்பிட்டார். மிகவும் சக்திவாய்ந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஒரே ஆய்வகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், ஏஐ பயன்பாட்டால் ஏற்படக்கூடிய மிகப் பெரிய அளவிலான பேரழிவு அபாயங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் சாம் அல்ட்மன் வலியுறுத்தினார்.