எஸ். ஏ. கல்லூரியில் 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' நூல் வெளியீட்டு விழா
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

30 Jul 2026 www.thinathulir.com

எஸ். ஏ. கல்லூரியில் 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' நூல் வெளியீட்டு விழா

எஸ். ஏ. கல்லூரியில் 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' நூல் வெளியீட்டு விழா

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் அகத் தர மதிப்பீட்டுக் குழு இணைந்து ஏற்பாடு செய்த 'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்' நூல் வெளியீட்டு விழா, 2026 ஜூலை 27 அன்று கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஸ்டாலின் சத்தியா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முகை மழலையர் பள்ளி மற்றும் அகாடமியின்இயக்குநரதிருமதிஅனுகிரகாஆதிபகவன்பங்கேற்றுசிறப்புரையாற்றினார்.கல்லூரியின் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, நூலின் முதல் பிரதியை வெளியிட்டு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் சொ. அன்பழகன், புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், *'தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்'* நூலின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.நிகழ்வில் கலந்து கொண்ட இரு இயக்குநர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழா ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வாக மட்டுமல்லாமல், தமிழின் தொன்மை, பண்பாட்டு வளம் மற்றும் இலக்கியச் சிறப்பை எடுத்துரைக்கும் நிகழ்வாகவும் அமைந்தது. மேலும், சிறப்பு விருந்தினர் தமிழர் நாகரிகத்தின் வளர்ச்சி முதல் இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பின் நிலை வரை பல்வேறு அம்சங்களை தனது உரையில் பகிர்ந்தார்.இந்நூலைத் தொகுத்த முனைவர் பா. விக்னேஷ் குமார், கட்டுரைத் தொகுப்பின் உள்ளடக்கம் மற்றும் அதன் நோக்கங்களை அறிமுகப்படுத்தினார். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.