எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் (75), டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று குணமடைந்து வீடு திரும்பினார். கடந்த 11-ந்தேதி காலை டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஜெகதீப் தன்கருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தகவல் கிடைத்ததும் எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்று உடல்நிலையைப் பரிசோதித்தனர். தொடர்ந்து, அவருக்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெகதீப் தன்கர், அங்குள்ள கார்டியோ-நியூரோ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.