எம்.ஜி.ஆருடன் 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் நடித்த நடிகை காலமானார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எம்.ஜி.ஆருடன் 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் நடித்த நடிகை காலமானார்

எம்.ஜி.ஆருடன் 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் நடித்த நடிகை காலமானார்

எம்.ஜி.ஆர். நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் அவருடன் இணைந்து நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (Meta Ruangrat) காலமானார். அவருக்கு வயது 83. உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த மெட்டா ரூங்ராட், நவம்பர் 3-ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். கடந்த 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. பல்வேறு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த மெட்டா ரூங்ராட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் நான்காவது கதாநாயகியாகவும் அவர் இடம்பெற்றிருந்தார். குறிப்பாக, எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் தோன்றிய 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார். தனது 19-வது வயதில் நடிப்புத் துறையில் கால்பதித்த மெட்டா ரூங்ராட், தாய்லாந்து திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த தனது கலைப்பயணத்தில் 180-க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். வயது முதிர்வால் பார்வைக் குறைபாடு ஏற்பட்ட நிலையிலும், நடிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைக்காமல் தொடர்ந்து கலைத்துறையில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அல்சைமர், நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த அவர், நவம்பர் 3-ம் தேதி உயிரிழந்தார். எம்.ஜி.ஆருடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நீங்கா நினைவுகளைப் பதித்த மெட்டா ரூங்ராட்டின் மறைவு தாய்லாந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.