எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா: பயோபிக் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா: பயோபிக் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா: பயோபிக் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. ‘எம்.எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ (M S – A Legacy on Screen)எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி. நிறுவனத்துக்காக பாடி சாதனை படைத்தார். பின்னர் திரைப்படங்களிலும் நடித்தார். அவர் அறிமுகமான படம் ‘சேவாசதன்’. இதைத் தொடர்ந்து மேலும் 4 படங்களில் நடித்த அவர், ‘மீரா’ திரைப்படத்தின் மூலம் பெரும் புகழைப் பெற்றார். கர்நாடக இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி, பல்வேறு உயரிய விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். 1954-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. 1968-ல் மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தைப் பெற்றார். இந்தப் பட்டத்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 1998-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமி 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தெலுங்கில் ‘ஜெர்ஸி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். அல்லு அரவிந்த், பன்னிவாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிப்பதற்காக திரிஷா, நயன்தாரா, சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. அந்த முயற்சிகள் இறுதியாக கைகூடாத நிலையில், ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் தொடக்க விழா நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.