எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் தேர்தல் செலவுக்கான டெபாசிட்டை வசூலிக்கும் வகையில் விதிமுறைகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்களிலேயே எந்த காரணமும் இல்லாமல் பதவியை ராஜினாமா செய்து, வேறு கட்சி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக வாதிடப்பட்டது. இதுபோன்ற ராஜினாமாக்களால் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான செலவுக்கு சம்பந்தப்பட்டவர்களையே பொறுப்பாக்கும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும் என்றும், இதற்கான சட்டம் தற்போது இல்லாத நிலையில் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. மேலும், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதேபோல் ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படலாம் என்றும் வாதிடப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இந்த விவகாரத்தில் ஆணையத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சட்டத்தில் திருத்தம் செய்வது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதா? சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது” என கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புடைய விவகாரம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.