எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காதது ஏன்? – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காதது ஏன்? – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காதது ஏன்? – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

தமிழக சட்டமன்றம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் கரவொலியுடன் தனது உரையைத் தொடங்கிய முதல்-அமைச்சர் விஜய், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், பெண்களின் பாதுகாப்பு, காவல் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பெண்களுக்கு எதிரான அவதூறான கருத்துகளை அரசு அனுமதிக்காது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து தி.மு.க.வை விமர்சித்த விஜய், தமிழக அரசியல் சூழலில் சமீபகாலமாக ஆபாசம் மற்றும் வன்முறை சார்ந்த பேச்சுகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சில தி.மு.க. உறுப்பினர்களின் பேச்சுகளையும் சுட்டிக்காட்டி, மக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர் மதிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்ட விஜய், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீராணம் குழாய் திட்டத்துக்கான டெண்டர் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தார். முரசொலி கட்டிடம் தொடர்பாக அமலாக்கத்துறை கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் வழங்குவதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.கட்சி நிதி விவகாரத்தையும் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். தி.மு.க. 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறித்தும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.மேலும், ஊழல் குறித்துப் பேசும்போது தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக விமர்சித்த விஜய், முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவில் கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கருத்துகளுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதுடன், தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அமளிக்கு மத்தியில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை தங்களது இருக்கைகளுக்குத் திரும்புமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனால் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால், விதிகளை மீறி செயல்பட்டால் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்தார்.விதிகளின்படி தங்களது விளக்கத்தை அளிக்க ஏற்கனவே வாய்ப்புகள் இருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்புகளை தி.மு.க. உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார். முதல்-அமைச்சர் பேசும்போதே தொடர்ந்து கூச்சல் எழுப்பியது தவறு என்றும், போஸ்டர்களை காண்பிக்க சட்டமன்றம் இடமல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.விஜய் கோரிக்கை – உதயநிதிக்கு பேச வாய்ப்புஇதற்கிடையில், தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு முதல்-அமைச்சர் விஜய் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்ற சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது இருக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினார்.இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர்.அப்போது பேசிய சபாநாயகர், ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாக இருந்து முதல்-அமைச்சரின் உரையை முழுமையாகக் கேட்டிருந்தால், அதற்குப் பதிலளிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று விளக்கினார். முதல்-அமைச்சர் தனது பதிலுரையை முடிக்காமல் தடுப்பதே நோக்கமாக இருந்திருந்தால், அதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.முதல்-அமைச்சர் தனது உரையை முழுமையாக முடித்துவிட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.ஆனால் மீண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கியதால் நிலைமை மீண்டும் பரபரப்பானது. இதனால் ஆவேசமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், உறுப்பினர்கள் தன்னை நிர்பந்தப்படுத்தி முடிவு எடுக்க வைக்க முடியாது என்று தெரிவித்தார்.மேலும், எதிர்க்கட்சி தலைவர் தனது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் உறுதியாக தெரிவித்தார்.