எதிர்கால ஆசைகளை ஏஐ வீடியோவாக வெளியிட்ட ‘டிசி’ பட நடிகை வாமிகா கபி!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எதிர்கால ஆசைகளை ஏஐ வீடியோவாக வெளியிட்ட ‘டிசி’ பட நடிகை வாமிகா கபி!

எதிர்கால ஆசைகளை ஏஐ வீடியோவாக வெளியிட்ட ‘டிசி’ பட நடிகை வாமிகா கபி!

பாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை வாமிகா கபி, தனது எதிர்கால ஆசைகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோவாக உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கபி நடித்த ‘டிசி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் இடம்பிடித்துள்ளது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சனங்களிலும் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், வாமிகா கபியின் நடிப்புக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஆகியோருடன் ‘பேபி ஜான்’ படத்திலும் வாமிகா கபி நடித்துள்ளார். தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய வாமிகா கபி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எதிர்காலத் திட்டங்களை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் ஏஐ வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘பிளான் ஏ’ முதல் ‘பிளான் எம்’ வரை தனது பல்வேறு ஆசைகளையும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளாகத் தொகுத்து வழங்கியுள்ளார். குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற முதல் திட்டம் நிறைவேறாவிட்டாலும், தன்னிடம் இன்னும் 25 திட்டங்கள் இருப்பதாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். பூனைகள், நாய்களுடன் மட்டும் வாழ்வது, உலகம் முழுவதும் சுற்றிப் பார்ப்பது, நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது, சாமியாராக மாறுவது என வித்தியாசமான ஆசைகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. வாமிகா கபியின் இந்த வேடிக்கையான கற்பனைகள் பலரையும் சிரிக்க வைத்துள்ளன. இதையடுத்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் வீடியோவுக்குச் சிரிப்பு எமோஜிகளைப் பதிவிட்டு தங்களது எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.