எடப்பாடி பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி அராஜகம்... அரசு பஸ் முன் படுத்ததால் பரபரப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

எடப்பாடி பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி அராஜகம்... அரசு பஸ் முன் படுத்ததால் பரபரப்பு

எடப்பாடி பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி அராஜகம்... அரசு பஸ் முன் படுத்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று புறப்படத் தயாரானபோது, மது போதையில் இருந்த ஒருவர் பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ய முயன்றார். இதனை கவனித்த நடத்துனர், பாதுகாப்பு விதிகளை சுட்டிக்காட்டி படிக்கட்டில் அமரக் கூடாது என எச்சரித்ததுடன், பேருந்தின் தானியங்கி கதவையும் மூடினார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பேருந்திலிருந்து இறங்கி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், பேருந்தை செல்லவிடாமல் அதன் முன்பக்கச் சக்கரத்தின் அருகே சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டதுடன், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.