எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழியை விமர்சித்து பதிவு வெளியிட்டது தொடர்பான இரு வழக்குகளில், பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் எச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை குறிப்பிட்டு, தமிழகத்திலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், தி.மு.க. எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஈரோடு போலீசார் எச்.ராஜாவுக்கு எதிராக இரு வழக்குகளை பதிவு செய்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தலா 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று வழங்கிய தீர்ப்பில், எச்.ராஜாவின் சமூக வலைதளப் பதிவுகளால் சமூகத்தில் இடையூறு ஏற்பட்டதாக நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.இதையடுத்து, இரு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.