எங்கள் போராட்டத்தை சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்’ - அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

23 Jul 2026 www.thinathulir.com

எங்கள் போராட்டத்தை சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்’ - அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

எங்கள் போராட்டத்தை சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்’ - அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 'நீட்' தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். பேரணியை தடுக்க பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், கூட்டம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதேவேளை, போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் பல இளைஞர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் நாடு முழுவதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்களின் போராட்டத்தை திட்டமிட்டு சீர்குலைக்க வெளிப்புற நபர்கள் அனுப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த காலகட்டத்தில் இதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், மக்களை தூண்டிவிடும் நோக்கில் பா.ஜ.க. தரப்பில் இருந்து சிலர் அனுப்பப்படுகிறார்கள். கல்வீச்சில் ஈடுபடுபவர்களும் அவர்கள் தான். காவல்துறையினர் லாரிகளில் கற்களை கொண்டு வந்து குவிக்கிறார்கள். பின்னர் அந்த கற்களை வீசி வன்முறையை ஏற்படுத்தி, அதன் பழியை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்மீது சுமத்த முயற்சிக்கிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார்.