தமிழக சட்டசபையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசுகையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடிக்கணக்கில் பணமும், அமைச்சர் பதவியும் வழங்குவதாக கூறியதாக தான் தெரிவித்த கருத்துகளை திமுகவினர் திரித்து பேசுவதாக குற்றம்சாட்டினார்.மேலும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவதாகவும், தான் யாரையும் தவறாக பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்ததாகவும், அதனை தங்கள் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்ததாகவும் சையத் பாருக் பாஷா கூறினார். காதர் மொய்தீன் பேட்டியில் தெரிவித்ததகவலையேதங்களதுகட்சிக்கூட்டத்தில்தான்குறிப்பிட்டதாகவும்அவர்விளக்கமளித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.அப்போது பேசிய அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லிம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது" என்றார்.மேலும், சையத் பாருக் பாஷா தனது பேச்சில் அதிமுகவினரை குறிப்பிடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மே 7ஆம் தேதி ஐயூஎம்எல் கட்சியை தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியது திமுகதான் என்றும், மறுநாளான மே 8ஆம் தேதி வேறு முடிவை திமுக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.ஐயூஎம்எல் அந்த முடிவை ஏற்க மறுத்ததால், மே 8ஆம் தேதி இரவு தங்களது இரண்டு உறுப்பினர்களை ஓட்டலில் அடைத்து வைத்தது யார், அவர்களை மிரட்டியது யார், பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தியது யார் என்பதையெல்லாம் வெளிப்படையாக கூற வேண்டிய நிலை வரும் என்றும் அமைச்சர் ஷாஜகான் ஆவேசமாக தெரிவித்தார்.மேலும், ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.