ஊத்துக்குளி அருகே இளம்பெண் கடத்திக் கொலை: காட்டுப்பகுதியில் உடல் மீட்பு – சக ஊழியர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கடத்திக் கொலை: காட்டுப்பகுதியில் உடல் மீட்பு – சக ஊழியர் கைது

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கடத்திக் கொலை: காட்டுப்பகுதியில் உடல் மீட்பு – சக ஊழியர் கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பூங்குளத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், அவரது உறவினர் மகள் உத்திரா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்குச் சென்று வந்த நிலையில், உத்திரா அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். தினமும் காலையில் மனைவியை மருத்துவமனையில் இறக்கிவிட்டுச் செல்லும் ரஞ்சித்குமார், மாலையில் வேலை முடிந்ததும் மீண்டும் அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து மாயமான உத்திரா கடந்த 14-ந்தேதி காலையில் வழக்கம்போல் உத்திராவை மருத்துவமனையில் விட்டுவிட்டு ரஞ்சித்குமார் வேலைக்குச் சென்றார். இரவு மனைவியை அழைத்துச் செல்ல மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோதும் உத்திரா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த ரஞ்சித்குமார் பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். உத்திரா மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அவர் கடைசியாக யாருடன் செல்போனில் பேசியுள்ளார் என்பதையும் விசாரித்தனர். முட்புதரில் அழுகிய நிலையில் உடல் இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டிய முட்புதரில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததுடன், ஆடைகள் மற்றும் உடல் அடையாளங்களை வைத்து அது காணாமல் போன உத்திரா என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய உத்திராவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உத்திரா அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்ததால், நகைக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உத்திராவுடன் பணியாற்றிய சரவணன் என்பவர் நகைக்காக அவரைக் கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சரவணனை கைது செய்தனர். மனைவியின் உடலைப் பார்த்து கணவர் கதறல் இதற்கிடையில், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற ரஞ்சித்குமார், மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். மனைவியின் மரணத்தைத் தாங்க முடியாமல், மருத்துவமனை அருகே இருந்த மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.