ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

ஊட்டி அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மதியம் பள்ளியில் வழக்கம்போல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சத்துணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சில மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. அடுத்தடுத்து மாணவர்கள் பாதிக்கப்பட்டதால், பள்ளி நிர்வாகம் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.இதையடுத்து 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி உட்பட மொத்தம் 19 மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், அனைவரும் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட பிறகே மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறினர்.மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் கூறினர்.