உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்

உலகெங்கும் வாழும் மலையாள சொந்தங்களுக்கு ஓணம் வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் விஜய்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் விஜய், உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், கேரளத்தின் அறுவடைத் திருநாளான ஓணம், அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கச் செய்யட்டும் என்றும், வண்ணமயமான பூக்கோலத்தைப் போல வாழ்க்கை அழகும் வளமும் பெறட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.அன்பை பகிர்ந்து, மகிழ்ச்சியை கொண்டாடி, ஒற்றுமையை போற்றும் இந்த திருநாள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருக வழிவகுக்கட்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.