உலகின் முதல் மெட்ரோ ரெயில் எங்கே தொடங்கியது தெரியுமா?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உலகின் முதல் மெட்ரோ ரெயில் எங்கே தொடங்கியது தெரியுமா?

உலகின் முதல் மெட்ரோ ரெயில் எங்கே தொடங்கியது தெரியுமா?

இன்று உலகின் பெரும்பாலான பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் அத்தியாவசியமான போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது. ஆனால், இந்த நவீன நகர்ப்புற ரெயில் போக்குவரத்துக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது 1863-ம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நிலத்தடி ரெயில் பாதை என்பது பலருக்கும் தெரியாத வரலாறு. உலகின் முதல் நிலத்தடி மெட்ரோ ரெயில் சேவை 1863-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி லண்டனில் தொடங்கப்பட்டது. ‘மெட்ரோபாலிட்டன் ரெயில்வே’ என்று அழைக்கப்பட்ட இந்த முதல் பாதை, பாடிங்டன் முதல் பேரிங்டன் வரையிலான சுமார் 6 கி.மீ. தூரத்தை இணைத்தது. இந்த ரெயில் பாதையை அமைக்க அப்போது சாலைகள் தோண்டப்பட்டு, அதற்குள் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி மீண்டும் மூடப்பட்டது. ‘கட் அண்ட் கவர்’ எனப்படும் இந்த முறையே ஆரம்பகால நிலத்தடி ரெயில் பாதை அமைப்பில் பயன்படுத்தப்பட்டது.காலப்போக்கில் ஆழமான சுரங்கங்களை அமைக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றது. இதன் மூலம் ‘டியூப்’ எனப்படும் ஆழமான சுரங்க ரெயில் அமைப்பும் விரிவடைந்தது.160 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துள்ள நிலையிலும், லண்டன் அண்டர்கிரவுண்ட் ரெயில் சேவை இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது 11 வழித்தடங்கள், 272 நிலையங்கள் மற்றும் சுமார் 402 கி.மீ. நீளமான ரெயில் பாதைகளுடன் இயங்கி வரும் இந்த அமைப்பு, தினமும் 50 லட்சம் பயணங்கள் வரை மேற்கொள்கிறது.1863-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிலத்தடி ரெயில் பாதை, இன்று உலகின் மிகப்பெரிய நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.லண்டனில் அதிகரித்து வந்த கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கத்திலும், பின்னர் மின்சாரத்தில் ரெயில்களை இயக்கும் திட்டத்துடனும் இந்த போக்குவரத்து அமைப்பு வளர்ச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவடைந்தன.