உலகின் மிகவும் அமைதியான நாடாக மீண்டும் ஐஸ்லாந்து; இந்தியா 12 இடங்கள் பின்னடைவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Jul 2026 www.thinathulir.com

உலகின் மிகவும் அமைதியான நாடாக மீண்டும் ஐஸ்லாந்து; இந்தியா 12 இடங்கள் பின்னடைவு

உலகின் மிகவும் அமைதியான நாடாக மீண்டும் ஐஸ்லாந்து; இந்தியா 12 இடங்கள் பின்னடைவு

உலக அமைதி குறியீட்டு (Global Peace Index) தரவரிசையில் ஐஸ்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பெற்று, உலகின் மிகவும் அமைதியான நாடு என்ற தனது நிலையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 இடங்கள் பின்தங்கி 127-வது இடத்திற்கு சரிந்துள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் பார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics and Peace) அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டு அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள 163 நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்து வரும் அந்த நாட்டின் குறைந்த குற்றச்செயல் விகிதமும், நிரந்தர ராணுவம் இல்லாத அமைப்பும் அதன் முன்னணித் தரவரிசைக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.மறுபுறம், இந்தியா இந்த ஆண்டின் பட்டியலில் 127-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் 115-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 12 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட இனவெறி வன்முறை, உள்நாட்டு மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லைப் பதற்றம் ஆகியவை இந்தியாவின் தரவரிசை சரிவுக்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளன.