உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமை... மகிமை மிக்க மீனாட்சி அம்மன் கோவில்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமை... மகிமை மிக்க மீனாட்சி அம்மன் கோவில்

உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமை... மகிமை மிக்க மீனாட்சி அம்மன் கோவில்

தமிழகத்தின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் தனித்துவம் பெற்றதாகத் திகழ்கிறது மதுரையின் மீனாட்சி அம்மன் கோவில். வரலாறு, கட்டிடக்கலை, வழிபாட்டு மரபு என பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்டுள்ள இந்தத் திருக்கோவில், பக்தர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. ‘அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்’ என்பது இதன் அதிகாரப்பூர்வ பெயராக இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ‘மீனாட்சி கோவில்’ என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும், அவரது வழிபாட்டு மரபையும் இது வெளிப்படுத்துகிறது. உலகின் 8-வது அதிசயம் என்ற பெருமைக்காக நடைபெற்ற போட்டியில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்ற இந்தக் கோவிலில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த கும்பாபிஷேக வரலாறு மீனாட்சி சந்நிதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக 1481-ம் ஆண்டு தொடர்பான வரலாற்றுப் பதிவு குறிப்பிடுகிறது. அந்த காலகட்டத்தில் டெல்லியில் இருந்து வந்த சுல்தானியப் படையெடுப்பால் கோவில் சேதமடைந்திருந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணர் சிதிலமடைந்த கோவிலைப் புனரமைத்து, மீனாட்சி சந்நிதிக்கு கும்பாபிஷேகம் நடத்தினார். இதைத்தொடர்ந்து, 1706 முதல் 1732 வரை மதுரையை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதர், சுவாமி சந்நிதிக்கு கும்பாபிஷேகம் செய்தார். 1878-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சார்பில் கோவில் முழுவதற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் 1923-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, 1974-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி, 1995-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி, 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி என பல்வேறு ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மதுரையை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். மீனாட்சிக்கே முதல் மரியாதை மீனாட்சி அம்மன் கோவிலின் வழிபாட்டு முறையிலும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு உள்ளது. இங்கு சுந்தரேசுவரரைவிட முதன்மையான மரியாதை மீனாட்சி அம்மன