உலக சமஸ்கிருத தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உலக சமஸ்கிருத தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

உலக சமஸ்கிருத தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

சமஸ்கிருத மொழியின் தொன்மை, சிறப்பு மற்றும் வளத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக சமஸ்கிருத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து மத நாள்காட்டியின்படி, ஷ்ரவண மாத பவுர்ணமி நாளில், அதாவது ஸ்ரவண பூர்ணிமா அல்லது ரக்ஷா பந்தன் தினத்தன்று உலக சமஸ்கிருத தினம் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி, இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், “உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். ஷ்ரவண பவுர்ணமியான இன்று, சமஸ்கிருத மொழியின் காலத்தால் அழியாத பெருமையையும் செழுமையையும் நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவின் அறிவு, சிந்தனை மற்றும் படைப்பாற்றலை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் முக்கிய மொழியாக சமஸ்கிருதம் விளங்குகிறது. பல்வேறு துறைகளில் இன்றளவும் அதன் ஆக்கபூர்வமான தாக்கத்தைகாணமுடிகிறது.இந்தசிறப்புமிக்கநாளில்,இந்தியாமட்டுமின்றிஉலகின்பல்வேறுபகுதிகளில்சமஸ்கிருதத்தைக்கற்றுவருபவர்கள், கற்பிப்பவர்கள் மற்றும் அதில் பொதிந்துள்ள காலத்தால் அழியாத அறிவுச் செல்வங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பவர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.