உயிரைவிடத் தமிழர் அடையாளமே பெரிது! சங்கரலிங்கனாரை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உயிரைவிடத் தமிழர் அடையாளமே பெரிது! சங்கரலிங்கனாரை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்

உயிரைவிடத் தமிழர் அடையாளமே பெரிது! சங்கரலிங்கனாரை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்

தமிழ்நாடு என மாநிலத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைத் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் விஜய், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை முக்கியக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவு நாளில் தமது மரியாதையையும் வீரவணக்கத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனது கொள்கையிலும் தமிழ் மண்ணின் தன்னாட்சி உரிமையிலும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், உயிரைவிடத் தமிழர் அடையாளமே உயர்ந்தது என்பதைத் தனது தியாகத்தின் மூலம் நிரூபித்தவர் சங்கரலிங்கனார் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது ஈடுஇணையற்ற தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் சங்கரலிங்கனார் கொண்டிருந்த உறுதியும், அவர் செய்த தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழட்டும் என்றும் முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.