உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்: மாணவர்களை அலைக்கழிப்பதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்: மாணவர்களை அலைக்கழிப்பதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம்: மாணவர்களை அலைக்கழிப்பதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கல்வியாண்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில், இதுவரை 65 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் அதிருப்தி எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்காமல் காலதாமதம் செய்வது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உதவித்தொகை கிடைக்காத எஞ்சிய மாணவர்கள் மீது அரசு என்ன காரணத்தைக் கூறப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான தங்களது கனவை நோக்கி இந்தத் திட்டத்தை நம்பி எவ்வாறு பயணிப்பார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட சமூகநீதித் திட்டத்தை தற்போதைய அரசு சீர்குலைப்பது ஏன் என்றும், துறையின் பெயரில் இடம்பெற்றுள்ள சமூகநீதியை அதன் செயல்பாடுகளில் காண முடியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.