உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நிராகரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நிராகரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நிராகரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் எனக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் வழக்கு தொடரப்படாததால் அதை நிராகரிக்க வேண்டும் என உதயநிதி தரப்பு வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மிலானி தரப்பு, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால அவகாசத்திற்குள்ளேயே தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. மேலும், உயர்நீதிமன்றப் பதிவுத்துறையும் மனுவை ஏற்று வழக்கு எண்ணை வழங்கியுள்ளதால், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.அருள்முருகன், உதயநிதி ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி ஜி.அருள்முருகன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், மிலானி தொடர்ந்துள்ள பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.