உதயநிதி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; குஷ்பு கடும் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உதயநிதி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; குஷ்பு கடும் விமர்சனம்

உதயநிதி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; குஷ்பு கடும் விமர்சனம்

தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அந்த உரையின் போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை குறிப்பிட்டு இரட்டை அர்த்தம் கொண்ட வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது.இந்த விவகாரத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, சென்னை போலீஸ் குழுவினர் இன்று தஞ்சையிலிருந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து மேலதிக விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.இந்நிலையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷா அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், "தான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்பதை பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.