உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: இந்தியர் உள்பட 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இரவு நேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷிய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான டிரோன்களை பயன்படுத்தியதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் தீ விபத்துகளும் ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.தாக்குதலில்12பேர்உயிரிழந்தநிலையில்,மேலும்பலர்காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல் உக்ரைன் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களின் மற்றொரு தீவிரமான கட்டமாக பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.