ஈரோட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கள்ளக்காதலன் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஈரோட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கள்ளக்காதலன் கைது

ஈரோட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கள்ளக்காதலன் கைது

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31). டிரைவராக பணியாற்றி வரும் இவரது மனைவி சுகுணா (26). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.சுகுணாவுக்கும், பி.பி.அக்ரஹாரம் இஸ்மாயில் மைதீன் வீதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தனர்.இந்த சூழலில், சம்பவத்தன்று மதியம் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுகுணாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள போதிய வசதி இல்லாததால், சுகுணாவின் உடல் நேற்று காலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில், சுகுணாவின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணியளவில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஈரோடு-பவானி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சாலையில் கற்கள் மற்றும் பலகைகளை போட்டு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துக்குமார், ஜெயசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்ட அவர்கள், மறியலில் ஈடுபட்ட சுகுணாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, சுகுணாவை தவுபிக் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரை கைது செய்து தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், தவுபிக்கிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து போலீசார் தவுபிக்கை கைது செய்து, வீடியோ கால் மூலமாக போராட்டத்தில் இருந்த சுகுணாவின் உறவினர்களிடம் அவரை காண்பித்தனர். இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பவானி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியது.போலீசார் நடத்திய விசாரணையில், தவுபிக் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.சம்பவத்திற்கு முந்தைய நாள் காலை சுகுணா, தவுபிக்கின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தவுபிக், சுகுணாவின் கழுத்தை நெரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் சுகுணா மயங்கி கீழே விழுந்து அசைவின்றி கிடந்துள்ளார்.இதையடுத்து தவுபிக், சுகுணாவை வீட்டிற்கு வெளியே சிறிது தூரம் இழுத்துச் சென்று சாலையோரத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் கூறினர். பின்னர் அவரை தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்இதற்கிடையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சுகுணா கழுத்தை நெரித்ததன் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுகுணாவின் கள்ளக்காதலனான தவுபிக் கைது செய்யப்பட்டுள்ளார்.