ஈரோடு: குடும்பத்துடன் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஈரோடு: குடும்பத்துடன் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோடு: குடும்பத்துடன் போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

ஈரோட்டில் மருத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சென்னிமலை சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பாக, சிஐடியு சார்பிலான அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். அரசாணையின்படி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான மருத்துவத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதுடன், மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தக் காத்திருப்புப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலையுடன் முடிவடையும் என ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.