ஈரோடு அரசு மருத்துவமனையில் மாமனாருக்கு கத்திக்குத்து: மருமகன் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாமனாருக்கு கத்திக்குத்து: மருமகன் கைது

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாமனாருக்கு கத்திக்குத்து: மருமகன் கைது

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாமனாரைக் கத்தியால் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும் அவரது மருமகன் ஆரோக்கியத்துக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்கனவே பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருவரும் சந்தித்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததால் ஆத்திரமடைந்த ஆரோக்கியம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலை பலமுறை குத்தியதாகத் தெரிகிறது. கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வடிவேல், ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாக விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஆரோக்கியத்தைப் பிடித்து, ஈரோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.