ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், அங்கு தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக டிரம்ப் மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அவர்கள் அணு ஆயுதத்தைப் பெற முடியாத வகையில் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஈரானின் பிக்காகஸ் மலைப்பகுதியில் ஏதேனும் செயல்பாடுகளை நாங்கள் கண்டறிந்தால், அங்குள்ள நிலத்தடி அணுசக்தி தளம் மீது தாக்குதல் நடத்துவோம். அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். ஈரான் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எங்களுக்கு முழுமையான தகவல்கள் உள்ளன. அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும். அமெரிக்க ராணுவத்தின் தலையீடு காரணமாகவே மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான மோதல் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.