ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க வேண்டாம்: சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

25 Jul 2026 www.thinathulir.com

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க வேண்டாம்: சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்க வேண்டாம்: சீனா, ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனையிடவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர், ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று தமக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களின் உறுதிமொழியை தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், எதிர்காலத்தில் சீனா அல்லது ரஷியா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அந்த நாடுகளின் சொந்த நலனுக்கே பாதகமாக அமையும் என்றும், அதனால் எதிர்மறையானவிளைவுகளைஅவர்கள்சந்திக்கநேரிடும்என்றும்டிரம்பஎச்சரித்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் சூழலில், ரஷியா மற்றும் சீனா மறைமுகமாக ஈரானுக்கு ராணுவ உதவி வழங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்ப் இந்த எச்சரிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கண்டுள்ளது.இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக கடந்த சில வாரங்களாக ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல், அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.