இளையராஜா இசையில் உருவாகும் சசிகுமாரின் புதிய திரைப்படம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இளையராஜா இசையில் உருவாகும் சசிகுமாரின் புதிய திரைப்படம்

இளையராஜா இசையில் உருவாகும் சசிகுமாரின் புதிய திரைப்படம்

நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசிகுமார், தொடர்ந்து ‘ஈசன்’ படத்தையும் இயக்கினார். அதன் பின்னர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘கருடன்’, ‘நந்தன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் சசிகுமார் புதிய படத்திற்காகக் கைகோர்த்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். கிரிஷ் கே. நகரேச்சா இணைத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சஞ்சய் விஜயராகவன் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். 6 டைமென்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியாவும் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் ஆதரவளிக்கிறது. ஹரிஷ் சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர். இளையராஜா இசையமைப்பதால், படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளன.