இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி

இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி

சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வருகிறார். இதையொட்டி அவரது சென்னை பயணத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி செல்கிறார். அங்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அவர், மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும், ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் மீண்டும் டெல்லி புறப்படுகிறார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில், இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.