இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை: சிக்கிய உருக்கமான கடிதம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை: சிக்கிய உருக்கமான கடிதம்

இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை: சிக்கிய உருக்கமான கடிதம்

புதுச்சேரியில் 26 வயதான இளம் பெண் டாக்டர் மயக்க மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் இருந்து உருக்கமான கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியுள்ளது. புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் யோகலட்சுமி (26), கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.டி. நுரையீரல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார். தேர்வுக்காக தயாராகி வந்த யோகலட்சுமி, கடந்த சில நாட்களாக மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பெற்றோருடன் வழக்கம்போல் உணவு சாப்பிட்ட அவர், பின்னர் தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் யோகலட்சுமி அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கதவை தட்டியபோதும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது யோகலட்சுமி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது அருகில் காலியான மயக்க மருந்து