இலவச பஸ் பயண திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும்: உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இலவச பஸ் பயண திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும்: உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

இலவச பஸ் பயண திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைக்க வேண்டும்: உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தில் தனியார் பஸ்களையும் இணைத்து, அதற்கான மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பெண்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தால், தனியார் பஸ்களின் டிக்கெட் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பஸ் கட்டணம் கடைசியாக 2018-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.63 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பஸ்களுக்கான உதிரிபாகங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, தற்போதைய செலவுகளைக் கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இந்நிலையில், பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அரசு செயல்படுத்த உள்ள இலவச பஸ் பயணத் திட்டத்தில் தனியார் பஸ்களையும் சேர்த்து, அவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்காக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும், தனியார் பஸ் தொழில் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.