இருமொழிஇருமொழிக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இருமொழிஇருமொழிக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இருமொழிஇருமொழிக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைக்கொள்கையில் விளையாட வேண்டாம்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் பின்னர் அகற்றப்பட்டன. சாத்தான்குளம்–நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகே, திருச்செந்தூர் சாலை விலக்கு பகுதியில் புதிதாக வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்கள் அம்புக்குறிகளுடன் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் முதலில் தமிழ் எழுத்துகளிலும், அடுத்ததாக இந்தி மொழியிலும், மூன்றாவதாக ஆங்கிலத்திலும் ஊர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்படும் வழிகாட்டி பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் நிலையில், சாத்தான்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தி எழுத்துகள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சையும் எதிர்ப்பும் எழுந்தது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதுவரை தமிழ்நாடு ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த நிலையில், தற்போது மாநில அரசே அதே நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்ப்பு எழுந்த பிறகு அணுகுமுறையை மாற்றிக்கொள்ளும் மற்றொரு முயற்சியா இது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடமாநில சமூக வலைதள பிரபலங்களுக்காக ஆட்சி நடத்துவதாக விமர்சித்த அவர், இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர்ந்து தவெக அரசு தனது அணுகுமுறையை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். “இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க் கொள்கை. அதில் விளையாட வேண்டாம்” என்றும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சாலை வழிகாட்டி பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டுள்ளன.