இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடலோரப் பகுதிகளில், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.