இயக்குனராக முதல் படம்: ஜேசன் சஞ்சயின் “சிக்மா” எப்படி இருக்கிறது?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இயக்குனராக முதல் படம்: ஜேசன் சஞ்சயின் “சிக்மா” எப்படி இருக்கிறது?

இயக்குனராக முதல் படம்: ஜேசன் சஞ்சயின் “சிக்மா” எப்படி இருக்கிறது?

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “சிக்மா”. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் நூலகம் நடத்தி வருகிறார் சந்தீப் கிஷன். ஆனால், பல்வேறு கடன்களில் சிக்கியுள்ள அவரால் வாங்கிய பணத்துக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தனது நூலகத்தையும் இழக்கிறார். இந்த சூழலில், கையில் இருக்கும் பணத்தை வைத்து சூதாடி லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு கிளப்புக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பண மோசடியை அவர் கண்டுபிடிக்கிறார். அது தொடர்பான முக்கியமான பென் டிரைவ் ஒன்றும் சந்தீப் கிஷனிடம் கிடைக்கிறது. இதையடுத்து, அந்த பென் டிரைவை வைத்துக்கொண்டு அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டு பேரம் பேசுகிறார். மறுபுறம், பென் டிரைவை கைப்பற்றுவதற்காக ஆந்திராவில் இருந்து சம்பத் தலைமையிலான தரப்பும் களமிறங்குகிறது. அந்த பென் டிரைவில் என்ன இருக்கிறது? அதை கைப்பற்ற ஒரு கும்பல் ஏன் அலைகிறது? இதன் பின்னணியில் உள்ள சிக்கல்களை சந்தீப் கிஷன் எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. சந்தீப் கிஷன் தனது இயல்பான நடிப்பாலும், வழக்கமான கலகலப்பான பாணியாலும் படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறார். தாயின் கனவை நிறைவேற்ற அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். கதாநாயகியாக வரும் பரியா அப்துல்லா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். சம்பத், ராஜூ சுந்தரம், ஷிப் பண்டிட், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோரும் தங்களது நடிப்பால் கவனம் பெறுகின்றனர். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. தமனின் இசையும் படத்தின் வேகத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பரபரப்பான காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக உள்ளன. அதே நேரத்தில், சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். அடிதடி பின்னணியிலான வழக்கமான கதையாக இருந்தாலும், அதில் சில புதுமையான அம்சங்களை இணைத்து, நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை தொடர்ந்து பரபரப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஜேசன் சஞ்சய். குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தின் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.