தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இம்மானுவேல் சேகரன் துணிச்சலுடன் போராடியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமத்துவம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் நிலைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்பட்டதாகவும், இளம் வயதிலேயே சமூக மாற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்ததாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்மானுவேல் சேகரனின் போராட்டமும் தியாகமும் சமூக நீதிக்கான பாதையில் என்றும் நினைவுகூரப்படும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது நினைவு நாளில், சாதி வேறுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.