இன்று ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இன்று ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

இன்று ரஷியா செல்கிறார் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக இன்று ரஷியா செல்கிறார். மாஸ்கோ செல்லும் அவர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்தப் பயணத்தின் போது, ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவுடன் இணைந்து வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு தொடர்பான IRIGC-TEC கூட்டத்திற்கும் ஜெய்சங்கர் தலைமை தாங்க உள்ளார்.மேலும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திக்கும் ஜெய்சங்கர், பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.