இன்று எம தீபம் ஏற்ற உகந்த நேரம் – கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இன்று எம தீபம் ஏற்ற உகந்த நேரம் – கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

இன்று எம தீபம் ஏற்ற உகந்த நேரம் – கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

தீபாவளிக்கு முந்தைய நாளில் வரும் திரயோதசி திதியில், எமதர்மராஜனை வழிபட்டு ஏற்றப்படும் தீபமே எம தீபம் அல்லது யம தீபம் எனப்படுகிறது. குடும்பத்தில் அகால மரணம், விபத்துகள் போன்ற துன்பங்கள் ஏற்படாமல் தடுக்கவும், மரண பயம் நீங்கவும் இந்த தீபம் ஏற்றப்படுவது வழக்கம். மேலும், எமதர்மராஜனின் அருளுடன் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மஹாளய பட்சத்தின்போது பூலோகத்திற்கு வரும் முன்னோர்கள், தீபாவளிக்கு முந்தைய காலகட்டத்தில் மீண்டும் பித்ரு லோகத்திற்குத் திரும்புவார்கள் என்பது ஐதீகம். அவர்கள் தங்களது இருப்பிடத்திற்குச் செல்ல வழிகாட்டும் ஒளியாக எம தீபம் கருதப்படுகிறது. எனவே, தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியில் இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் பித்ரு லோகத்திற்குத் திரும்புவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில், இன்று (06.11.2026) திரயோதசி திதி நாள் முழுவதும் இருப்பதால் மாலையில் எம தீபம் ஏற்றலாம். இன்று காலை 11.59 மணிக்குத் தொடங்கிய திரயோதசி திதி, நாளை காலை 11.44 மணி வரை நீடிக்கிறது. எம தீபம் ஏற்றுவதற்கான உகந்த நேரம்: இன்று மாலை 5.26 மணி முதல் 6.45 மணி வரை எம தீபம் ஏற்றுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.