இன்றே பணிக்கு கடைசி நாள்: இமெயிலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

இன்றே பணிக்கு கடைசி நாள்: இமெயிலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்

இன்றே பணிக்கு கடைசி நாள்:  இமெயிலில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆரக்கிள் நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான முதலீடுகளுக்கு மத்தியில், நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “இன்றே உங்கள் கடைசி வேலை நாள்” இந்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் ஆரக்கிள் நிறுவனத்தின் சில ஊழியர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சலில், நிறுவனத்தின் தற்போதைய தொழில் தேவைகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்களை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த நாளே அவர்களின் கடைசி வேலை நாளாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பணிநீக்க அறிவிப்பு கிடைத்த சில நிமிடங்களிலேயே, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அலுவலக இமெயில், VPN மற்றும் நிறுவனத்தின் லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கான அணுகல்கள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐடி ஊழியர்களிடையே கவலை ஆரக்கிளின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் உள்ள ஐடி ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து பணியாளர் எண்ணிக்கையை குறைத்து வருவது ஊழியர்களிடையே வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. ஆரக்கிளில் இதற்கு முன்பும் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிய சுற்று ஆட்குறைப்பு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.