இந்தியாவில் ஏஐ துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இந்தியாவில் ஏஐ துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஏஐ துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஜெனரேட்டிவ் ஏஐ (Gen AI) துறையில் திறமையான பணியாளர்களுக்கான தேவைக்கும், அவர்களின் இருப்புக்கும் இடையே 53 சதவீத பற்றாக்குறை இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் 16 சதவீதம் பேரிடம் மட்டுமே ஏஐ தொடர்பான திறன்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக ஏஐ திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவில் ஏஐ திறன் பெற்ற பணியாளர்களின் தேவைக்கும் கிடைக்கும் திறனுக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைகளைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பணிகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏஐ துறையைப் போலவே கிளவுட் தொழில்நுட்பத் துறையிலும் திறமையான பணியாளர்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பற்றாக்குறை நிலவுகிறது. சைபர் பாதுகாப்புத் துறையில் இந்த இடைவெளி 25 முதல் 30 சதவீதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஏஐ தொடர்பான திறன்களை கொண்டிருந்தாலும், அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் மட்டுமே மேம்பட்ட ஏஐ திறன்களை பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், ஜென் ஏஐ, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் திறமையான பணியாளர்களுக்கான தேவை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.