இந்தியாவிலேயே முதல் முறையாக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது திமுக – அமைச்சர் ராஜ்மோகன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இந்தியாவிலேயே முதல் முறையாக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது திமுக – அமைச்சர் ராஜ்மோகன்

இந்தியாவிலேயே முதல் முறையாக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது திமுக – அமைச்சர் ராஜ்மோகன்

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஆட்சியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நூலகங்களுக்காகப் போலி எழுத்தாளர்களின் பெயர்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்காகப் பல்வேறு நூலகங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறினார். இதேபோல், திருச்சி காமராஜர் அறிவுலகத்திற்கும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களை வாங்க திமுக ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களுக்குத் தெரியாமலேயே முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகக் கூறினார். கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாகப் போலியான பெயர்களைப் பயன்படுத்தி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டினார். அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்குவதற்கான பரிந்துரையில் ஜெயரஞ்சன் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்தப் பதிப்பகத்துக்கு கடந்த மார்ச் மாதமே கருவூலம் மூலம் பணம் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ராஜ்மோகன் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடமிருந்து புத்தகங்களையும், அதற்காகச் செலுத்தப்பட்ட தொகையையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இந்தப் பரிவர்த்தனையில் கமிஷன் பெற்றவர்களிடமிருந்தும் பணம் மீட்கப்படும் எனக் கூறினார். நூலகப் புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்கத் தனியாகச் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும், அனைத்து நூலகங்களிலும் சோதனை நடத்தி முறைகேடுகள் கண்டறியப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தரமற்ற புத்தகங்களை திமுகவினர் தங்களது வீட்டுக் குழந்தைகளுக்கே வழங்குவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், மாணவர்களிடம் திமுகவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் திமுக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோராவிட்டால் பொதுமக்களும் மாணவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்த அமைச்சர், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நூல் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், போலி புத்தகங்கள் வாங்கப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். புத்தகங்கள் வாங்குவதிலேயே இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டதிலும் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக ராஜ்மோகன் சந்தேகம் தெரிவித்தார். எனவே, நூலகக் கட்டடப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.