இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம்.. ஆசிய கோப்பையில் விளையாடுவாரா..?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம்.. ஆசிய கோப்பையில் விளையாடுவாரா..?

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம்.. ஆசிய கோப்பையில் விளையாடுவாரா..?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 6-வது ‘ஹன்ட்ரட்’ (100 பந்து) கிரிக்கெட் தொடரின் பெண்கள் பிரிவில் சதர்ன் பிரேவ் அணிக்காக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடி வந்தார். இந்நிலையில், தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டதால் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார்.ஜெமிமாவுக்கு மாற்று வீராங்கனையாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் சார்லி நாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சதர்ன் பிரேவ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 143 ரன்கள் சேர்த்துள்ளார்.இதற்கிடையே, பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 28-ந் தேதி துபாயில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் 30-ந் தேதி தாய்லாந்தை எதிர்கொள்கிறது.ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஜெமிமா முழு உடல் தகுதியை பெறுவது சிரமம் என தெரிகிறது. இதனால், அவர் ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக களமிறங்குவாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.