இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமல்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமல்

இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் முதல் அமல்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நியூசிலாந்துடனான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கையெழுத்தானது. இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரியையும் இந்தியா முழுமையாக ரத்து செய்துள்ளது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நியூசிலாந்து முதலீடு செய்யும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.